செய்திகள்

கொடிநாள் நிதி வசூல்: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பாராட்டு சான்றிதழ்

வேலூர், மார்ச் 25–

2017 ஆம் ஆண்டு படைவீரர் நல கொடிநாள் நிதி அதிக வசூல் புரிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு கவர்னரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

படைவீரர் கொடிநாள்-2017-ம் ஆண்டு இலக்கினை காட்டிலும் அதிக நிதி வசூல் புரிந்தமைக்காக கவர்னரால் வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றை, வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.செந்தில் குமார் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், நீதியியல் மேலாளர் பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *