Uncategorized

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு 2 வார பயிற்சி முகாம்

கோவை, செப்.11–

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கான 2 வார பயிற்சி முகாம் தொடங்கியது.

பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் தேசிய அறிவியல் அகாடமி, பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமி இணைந்து நடத்தும் உயிர்தொழில் நுட்பம் மூலம் பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய இரண்டு வார பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.

இம்முகாமிற்கு இந்திய அளவில் ஜம்மு-காஷ்மீர், புதுடெல்லி, உத்திரப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த 145 பேராசிரியர்கள் விண்ணப்பத்ததில் 35 பேராசிரியர்கள் தோ்வு செய்யப்பட்டு, பயற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமின் இயக்குநர்கள் எடத்தில் விஜயன், பொன்முருகன், தாவரவியல் துறைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

அதைத் தொடர்ந்து உயிர்தொழில் நுட்பம் மூலம் பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தொகுப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் முகாமின் இயக்குநர் பொன்முருகன், நன்றிரை ஆற்றினார்.

பின்னர் பயிற்சி முகாமின் இயக்குநர் எடத்தில் விஜயன், மண் பல்லுயிர் பற்றிய விரிவுரையில், மண் வளங்கள், மண்ணில் இருக்கும் நுண்ணூயிரிகளின் முக்கிய பங்குகள், மண் வளத்தை காக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், தொலைநோக்கு பார்வையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இப்பயிற்சி முகாமில் 2 வாரங்களுக்கு பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சி முகாமானது 24 ந் தேதி நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *