சென்னை, செப் 19
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்–2023, சென்னைப் பெருநகரப் பகுதியில் நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதியை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கினர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்–2023, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மற்றும் மதுரையில் கடந்த 19.1.2024 முதல் 31.1.2024 வரை சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்விற்கு ஏற்படும் செலவில், ரூ.61.90 கோடியை அந்தந்த உள்ளூர் திட்டமிடல் ஆணையங்களின் நிதியிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு வழங்க ஆணையிடப்பட்டதின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்னைப் பெருநகரப் பகுதியில் நடத்தப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதியை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.33 கோடி மதிப்பிலான காசோலையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல்அலுவலர் அ.சிவஞானம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.