செய்திகள்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு: 2வது இடம் பெற்று தமிழ்நாடு அணி சாதனை

மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி பரிசு வழங்கி பாராட்டு

சென்னை, பிப். 1–

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு அணி 2வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 ஜனவரி 19-ம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இதற்கான போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. கேலோ இந்தியா போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

தமிழகம் 2வது இடம்

இந்த போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 8ஆம் இடத்தை பெற்ற நிலையில், இந்தாண்டு 2ஆம் இடத்தை பெற்று தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடம் பிடித்துள்ளது. டெல்லி, 13 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

கேரளா 10வது இடம்

13 தங்கப்தக்கம் உள்பட 24 பதக்கங்களுடன் தெலுங்கானா 6வது இடமும், 11 தங்கம் உள்பட 42 பதக்கங்களுடன் உத்திரப்பிரதேசனம் 7வது இடமும், 11 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் பஞ்சாப் 8வது இடமும், 11 தங்கம் உள்பட 35 பதக்கங்களுடன் கேரளா 9வது இடமும், 10 தங்கம் உள்பட 31 பதக்கங்களுடன் மணிப்பூர் 10வது இடமும் பெற்றன.

இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த மஹாராஷ்டிரா, இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா மாநில அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை வழங்கினார்.

பரிபாதி பெண்கள்

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நடந்த கேலோ இந்தியா தனித்தன்மையுடன் நடந்தது. அனைவருக்கும் அருமையான விருந்தோம்பலை அளித்த தமிழக மக்களுக்கும், விளையாட்டு சிறப்பாக நடக்க உதவிய தமிழக அரசுக்கும் எனது பாராட்டு. இந்த சீசனில் 2,307 வீரர்கள், 2,147 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு பெண்கள் பங்கேற்றது பெருமையாக உள்ளது. இதில் பங்கேற்று பதக்கம் வென்றவர்கள் அனைவரும் வளமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு ஏழ்மையை சவாலாக எடுத்து வென்ற தனித்தனி கதைகள் உள்ளன.

பளு துாக்குதல் பிரிவில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. அதற்கு காரணமான சஞ்சனா, கீர்த்தனா, ஆர்த்தி உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். கிழக்கிந்திய மாநிலங்கள், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் இருந்தும் பலர் சாதித்துள்ளனர்.<BR/>அடுத்து நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா புதிய சாதனை படைக்கும். அதற்கான முன்னோட்டமாக இது உள்ளது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால், திறமையின் வெளிப்பாடுதான் உன்னதம். எங்கும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவற வேண்டாம். உங்களின் திறமையை பதக்கத்தால் அலங்கரித்து அங்கீகரியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘‘நாட்டின் விளையாட்டு தலைநகரம் ஆகும் அனைத்து தகுதிகளும் தமிழகத்திற்கு உள்ளன என்பது, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நிரூபித்துள்ளது. தமிழகத்தில், விளையாட்டை ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என, முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில், தமிழகத்தில் எல்லா நிலைகளிலும், எல்லா இடங்களிலும் உள்ள திறமையாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *