செய்திகள்

கேரள முதல்வராக 2 வது முறை பினராயி விஜயன் பொறுப்பேற்பு

திருவனந்தபுரம், மே 20–

கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று மாலை பொறுப்பு ஏற்கிறார்.

கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பினராயி விஜயன் இரண்டாவது முறையாக கேரளாவின் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. முதல்வர் உள்ளிட்ட 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், முதல்வர் பினராயி விஜயனை தவிர, மற்ற அனைத்து அமைச்சர்களும் புதியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *