செய்திகள்

கேரள மக்களிடையே அன்பு, சமத்துவம், ஒருமைப்பாடு மேம்பட ஓணம் பண்டிகை உதவும்

கவர்னர் ஆரிப் முகமது கான் வாழ்த்து

திருவனந்தபுரம், ஆக 28-

கேரள மக்களிடையே அன்பு, சமத்துவம், ஒருமைப்பாடு மேம்பட ஓணம் பண்டிகை உதவும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் உலக அளவில் உள்ள கேரள மக்களுக்கு மற்றும் கேரள மாநில மக்களுக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஓணம் கோலாகல கொண்டாட்டத்தையொட்டி கவர்னர் முகமது கான் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகை கேரள மக்களிடையே சமத்துவம் ஒருமைப்பாடு மகிழ்ச்சி கொண்டாட்டம் ஆகியவற்றை பாரம்பரியமாக உருவாக்கி வருகிறது. இந்த கோலாகல பண்டிகை மகிழ்ச்சி ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கவும் தொடர்ந்து மேலும் மேலும் பெருகவும் உதவுகிறது. மக்கள் தீமைகளை அழித்து புதுமையை வரவேற்று கோலாகலமாக ஓணம் கொண்டாட வாழ்த்துகிறேன்.

கேரள மக்களின் ஒவ்வொரு இல்லத்திலும் வளம் செழிக்க வாழ்த்துக்கள் சமத்துவம் ஒற்றுமை எங்கும் பரவட்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *