செய்திகள்

கேரளாவில் தொடர் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திருவனந்தபுரம், அக். 25–

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு என 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மலையோர பகுதி மற்றும் அரபிக் கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தபட்டனர்.

நிலச்சரிவு

இடுக்கி நெடுங்கண்டம் அருகே பச்சடி பகுதியில் ஏற்பட்ட நிலசரிவில் ஒரு ஏக்கர் நிலம் நீரில் இழுத்து செல்லப்பட்டது. இதில் நடவு செய்யப்பட்டிருந்த விளை பொருட்கள் முற்றிலும் நாசமானது. இந்நிலையில் அடிமாலி பகுதியிலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *