செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை: எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து

டெல்லி, ஏப். 27–

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 10 மாணவர்களை சேர்க்க பரிந்துரை கடிதம் வழங்க முடியும். இந்திய ஒன்றிய அரசு பள்ளிகளில் சேர, ஏராளமான கோரிக்கைகள் வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. இதனை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

எம்பி ஒதுக்கீடு ரத்து

இது தொடர்பாக, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது அதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து ஒதுக்கீடுகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்தது.

அதேவேளை, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச ஒதுக்கீடு முறை இந்தாண்டும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.