வர்த்தகம்

‘கொரோனா’ காலத்திலும் சுகாதாரமான வசதிகளுடன் செயல்படும் அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்

சென்னை, செப்.13

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய நோயாளிகளிகளுக்கு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. சென்னையில் பாதுகாப்பாக டயாலிசிஸ் செய்ய அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

36 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அனுபவம் வாய்ந்த அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்குகள், இந்த கடினமான காலங்களில் தங்கள் நோயாளிகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கிளினிக்கின் சிறுநீரக சிகிச்சை மூத்த நெப்ராலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் பேசுகையில், “பாதுகாப்பைமையமாகக்கொண்டுதரமானசுகாதாரசேவையைவழங்குவதில்அப்பல்லோகுழுஎப்போதும்முன்னணியில்உள்ளது. எங்கள் பிரத்யேக நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு குழுவுடன் இணைந்து, டயாலிசிஸ் நோயாளிகளுக்கும், நோய்த் தொற்றுகளுக்கு ஆளாக கூடிய பிற நோயாளிகளுக்கும் நோய் தொற்று அபாயத்தை குறைக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் வகுத்துள்ளோம்” என்று கூறினார்.

10 ஆண்டுகளாக, உலகத் தரம் வாய்ந்த டயாலிசிஸ் வசதிகளை வழங்குகிறது, இது அதிநவீன உள்கட்டமைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற, தொழில்நுட்ப வல்லுநர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். இது பற்றி அறிய www.apollodialysis.com வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *