வாழ்வியல்

கொடுக்காய்ப் புளியிலுள்ள சில மருத்துவ பண்புகள்–2

கொடுக்காய்ப் புளியில் உள்ள விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்) சருமம், கேசம், நகங்கள் நன்கு வளரவும், அவற்றை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் சி-யானது சருமத்தை விரைவில் முதுமை அடையாமல் பாதுகாக்கிறது. எனவே இக்காயினை உண்டு சருமம், கேசம், நகங்களின் அழகினைப் பாதுகாக்கலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

இதில் உள்ள விட்டமின் சி-யானது ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்படுவதுடன் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது. எனவே இப்பழத்தினை உண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறலாம்.

இப்பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை சேதமுறாமல் பாதுகாத்து அவற்றை வலுவாக்குகின்றன. மேலும் இம்மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

இப்பழத்தினை உண்ணும்போது இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கல்லீரல் பாதுகாப்பைப் பெறலாம்.

இப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சவும் இவை உதவுகின்றன.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், அல்சர் போன்ற செரிமானம் சம்பந்தமான நோய்களையும் நார்ச்சத்து ஏற்படாமல் தடுக்கிறது.

கொடுக்காய்ப்புளியினை மூன்று நாட்கள் அறையின் வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி சட்னி, சூப்புகள், சாலட் உள்ளிட்டவை தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த, மன அழுத்தம் போக்கும் கொடுக்காய்ப்புளியினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *