வாழ்வியல்

கெப்ளர் கண்டு அறிந்த 18 ஆயிரம் புதிய கோள்கள்!

Spread the love

அமெரிக்க விண்வெளி அமைப்பானா நாசா, கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளது. இந்த தகவல்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கே பல காலம் ஆகும் என்பது வெட்ட வெளிச்சம்.
ஜெர்மனியை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள், கெப்ளர் விண் தொலைநோக்கி சேகரித்த தகவல்களை வைத்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆய்வில், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள பல கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இதுவரை, 18 புதிய கிரகங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுவரை கெப்ளர் உள்ளிட்ட பல விண் தொலைநோக்கிகள் தந்த தகவல்களின்படி, 4 ஆயிரம் புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை நெப்டியூன் கிரகத்தின் அளவே உள்ளவை.
ஆனால் அண்மையில் ஜெர்மானிய விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கும் புதிய கோள்கள், பூமியின் அளவைக் கொண்டவை என்பது தான் மிகவும் சிறப்பிற்குரியது. இது பூமிக்கு மாற்றான வாழிடங்களை கண்டு பிடிப்பதை சுவாரசியமாக்கிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *