வாழ்வியல்

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி

இஞ்சி கூந்தலுக்கு மென்மையும் மிருதுவான தன்மையும் கொடுக்கும். உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம்.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி சாற்றை தலையில் தடவிவிட்டு காலையில் ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிவிடலாம்.

இஞ்சி சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அது மயிர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் சிறப்பு சேர்மம் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவும். சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலுச் சேர்க்கும்.

உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும் மிருதுவான தன்மையும் கொடுக்கும். கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும். கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *