செய்திகள்

கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

விழுப்புரம், ஏப். 20–

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு 5 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இதில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டு பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டனர். இந்நிலையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் தேரோட்டத்தில் பங்கேற்ற நிலையில் கூத்தாண்டவர் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. கூவாகம் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள திருநங்கைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் வருகை புரிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.