செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று

நெல்லை, ஏப். 21–

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி விண்வெளி ஆராச்சி மையம் ஆகியவற்றில் மொத்தம் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

164 பேருக்கு தொற்று

இந்நிலையில், நெல்லையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பணிபுரியும் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்கள் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதன் அருகில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 132 பேருக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 99 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில், இதுவரை 2,381 பேர், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 225 பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாக தான் இந்த பகுதியில் கொரோனா தொற்று பரவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *