நெல்லை, ஏப். 16–
கூடங்குளத்தில் 79 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.