செய்திகள்

‘கூகுள் பே’ செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு

மதுரை, ஏப். 1–

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற செயலிகளில் பண பரிமாற்றத்தை தடை செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, ஆன்லைன் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என்றும், இதற்காக, நாளை முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *