சிறுகதை

குழந்தையும் தெய்வமும் ஒன்று – ராஜா செல்லமுத்து

குழந்தைகள் தெய்வத்தின் வடிவங்கள். குழந்தைகள் பூக்களின் வார்ப்புகள். குழந்தைகள் சுயநலம் இல்லாத சிற்பங்கள் என்று குழந்தைகள் நிறைய வகைப்படுத்தலாம். குழந்தைகளை யார் வேண்டுமானாலும் கொஞ்சலாம். பூக்களை யார் வேண்டுமானாலும் நுகரலாம் என்ற கோட்பாட்டுக்குள் இருந்தாள் தியா .

தியா 3 வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தை. சொல்லிக் கொடுத்ததை மூளையில் அச்சு போல் ஏற்றி வைத்திருந்தாள். அந்தக் குழந்தையை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்தான் முத்து.

பெரிய மனிதர்கள் நடிக்கும் அந்தப் படத்தில் குழந்தையும் நடித்திருந்தது. பெரிய மனிதர்கள் எல்லாம் வசனங்களைப் பேசத் தடுமாறும் போது அந்தக் குழந்தை மட்டும் சொன்னதை அப்படியே செய்தது. எப்படி பார்க்க வேண்டும். எப்படிச் சிரிக்க வேண்டும் . எப்படி வசனம் பேச வேண்டும் என்று முத்து சொல்லிக் கொடுத்த போது அந்தக் குழந்தை அத்தனையையும் அப்படியே செய்தது .

முத்துவுக்கு ஆச்சரியம். என்ன இது இந்தக் குழந்தை சொல்வதெல்லாம் அப்படியே செய்கிறதே; இதைத்தான் குழந்தையும் கடவுளும் ஒன்று என்று சொன்னார்களா? குழந்தைக்கு சிந்திக்கும் அறிவு இருக்காது என்று யார் சொன்னது? சொன்னதை அப்படியே செய்கிறதே. இதை யார் சொல்லிக் கொடுத்தது ?.சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற வெட்கமோ ?அச்சமோ? பயமோ ? எதுவும் இல்லாமல் இந்தக் குழந்தை சொன்னதைச் சொல்லப் போகிற வசனத்தை தெள்ளத்தெளிவாக பேசுகிறது. இது எப்படி? என்று முத்து மனதுக்குள் நினைத்தான்.

ஒன்று அவனுக்கு சட்டெனப் புரிந்தது.காரணம் குழந்தையாக இருக்கும்போது குழந்தையின் மூளையில் எந்த பயமும் எந்த அச்சமும் ,, நிகழ்காலம் இறந்த காலம் எந்தக் காலமும் எதுவும் தெரியாது.

தற்போது என்ன நடக்கிறது என்பது மட்டும் தான் அந்தக் குழந்தைக்கு தெரியும். பெரிய மனிதர்களைப் போல நடந்து முடிந்ததை பற்றி வருத்தப்படுவதும் நடக்கப் போவதைப் பற்றி கவலைப்படுவதும் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி சலனப்படுவதும் குழந்தைகள் மனதில் குடியேறுவதில்லை; அதுதான் தியா . அத்தனை விஷயங்களையும் ஒரே டேக்கில் முடித்து விட்டாள் என்று முத்துவுக்குத் தெரிந்தது .

ஸ்டார்ட் கேமரா, ஆக்சன் என்று சொல்லி முடித்ததும் ரிகர்சலில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்தது. அந்தக் குழந்தை தியாவைத் தட்டிக் கொடுத்து கை கொடுத்து அந்தச் சின்ன குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் முத்து.

இந்தக் குழந்தை எதிர்காலத்தில் நல்ல நடிகையாக வரும் அல்லது எல்லோரும் பாராட்டும் படியான பெரிய இடத்தில் போய் அமரும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்கள். இந்தக் குழந்தைக்கு அந்த அறிவின் முதிர்ச்சி இப்போதே தெரிகிறது என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தான் முத்து.

அந்தப் படம் முடிந்து சில வாரங்கள் கழித்து அந்தக் குழந்தையை ஒரு முறை சந்தித்தான் முத்து

தாத்தா… தாத்தா ….பேப்பர் படிக்கிறீங்களா? என்ன செய்றீங்க? என்று அவன் படப்பிடிப்பில் சொல்லிக் கொடுத்த வசனத்தை முத்துவைப் பார்க்கும்போது ஒப்பித்தது.

அந்தக் குழந்தைக்கு கை கொடுத்து விட்டு இன்னும் அந்த வசனத்தை மனப்பாடமாக வைத்திருக்கிறாயே? என்று அப்போதும் பாராட்டினான் முத்து.

இரண்டு மாதங்கள் கழித்து தியாவை மீண்டும் முத்து சந்திக்க வேண்டி இருந்தது .அப்போதும் அவன் சொல்லிக் கொடுத்த வசனத்தை அடிபடாமல் அப்படியே சொன்னாள் தியா

இது என்ன வியப்பு ? ஒரு மனிதனை பார்க்கும் போதெல்லாம் அவன் சொல்லிக் கொடுத்த வசனம் நினைவுக்கு வருகிறது என்றால் அந்தக் குழந்தை

அந்த மனிதனையும் அந்த வசனத்தையும் எவ்வளவு ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். வெறும் பாடப்புத்தகத்தில் மட்டும் எழுதி வைக்கப்பட வேண்டியதில்லை குழந்தையின் தெய்வமும் ஒன்று என்று.

முத்துவின் கண்கூடாகவே தியாவின் உருவத்தில் அது நிகழ்ந்தது .

“குழந்தையும் தெய்வமும் ஒன்று”.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *