செய்திகள்

குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி சென்னை கேலக்ஸி இன்னர் வீல் கிளப் கருத்தரங்கம்

Spread the love

சென்னை, நவ.7-

சென்னை கேலக்ஸி இன்னர் வீல் கிளப், தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையுடன் இணைந்து குழந்தைகளை தத்து எடுப்பது பற்றிய கருத்தரங்கை நடத்தியது. இதில் 300 பேர் கலந்து கொண்டனர்.

குழந்தை தத்து எடுப்பதில் உள்ள பிரச்சனை, தேவையான ஆதாரங்கள் பற்றி இத்துறை வல்லுனர்கள் விவரித்தனர். சென்னை இன்னர் வீல் கிளப் தலைவி சுபா ஸ்ரீகாந்த் வரவேற்றார்.

தேசிய அளவில் இன்னர் வீல் கிளப் லட்சியமாக குழந்தை தத்து எடுக்க ஊக்கமளிக்கும் திட்டங்களை நடத்துகிறது. சென்னை இன்னர் வீல் கிளப் 50 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. இது நடத்தும் பார்பரா கெல்வி இல்லத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 40 ஏழை பெண் குழந்தைகள் தங்கும் வசதியை வழங்குகிறது. ஆயிரம் விளக்கில் தினசரி 60 குழந்தைகளை பராமரிக்கும் பால்வாடியை இது நிர்வகிக்கிறது. இது தவிர ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது என்றார் சுபா ஸ்ரீகாந்த்.

சென்னை கேலக்ஸி இன்னர் வீல் கிளப் தலைவி மீனாட்சி ஆறுமுகம் வேலன் ஒருங்கிணைத்தார். மத்திய குழந்தைகள் தத்து ஏற்பு கண்காணிப்பு அமைப்பு தலைவி ஆண்டாள் தாமோதரன், துணைத் தலைவி சந்திராதேவி, தணிகாசலம் (இந்தியாவில் குழந்தை தத்து எடுப்பு நூல் எழுதியவர்) மாவட்ட சேர்மன் நளினி ஒளிவண்ணன் ஆகியோர் விழாவில் பேசினர்.

சந்திராதேவி தணிகாசலம், இந்தியாவில் குழந்தை தத்து எடுப்பு முறை பற்றியும் அரசு விதிகள், தேவையான ஆதாரங்கள் பற்றியும் விளக்கினார்.

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை கமிஷனர் ஆர். லாவண்யா, தமிழக அரசின் குழந்தை தத்து எடுப்பு திட்டங்களை விவரித்தார்.

குழந்தை தத்து எடுப்பது பற்றிய தகவல் பெற சுபா ஸ்ரீகாந்தை 98410 42823 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *