அறிவியல் அறிவோம்
ககன்தீப் வைராலஜிஸ்ட் மற்றும் அறிவியலாளர். இவர் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளை ஒழிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிரபலமானவர். இவர் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஃபெலோவாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர்.
உலகின் பழம்பெரும் அறிவியல் நிறுவனமான ராயல் சொசைட்டி சிறந்த விஞ்ஞானிகளை கௌரவித்து வருகிறது. ககன்தீப் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் (THSTI) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.
ககந்தீப் தேசிய ரோட்டாவைரஸ் மற்றும் டைபாய்ட் கண்காணிப்பு நெட்வொர்க் உருவாக்கியுள்ளார். தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஆய்வகங்களை நிறுவியுள்ளார். நோய்தொற்று, குடல் செயல்பாடு, உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றிடையே உள்ள சிக்கலான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட விரும்புகிறார்.