முதலமைச்சா் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மே 1–
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிடோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “திருமணம் செய்துள்ள மணமக்களை நான் கேட்டுக்கொள்வது உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ்ப்பெயர் இணையதளம்
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளை மேற்கொள்காட்டி நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சரிடம் கோாிக்கை விடுத்தாா். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், தமிழ் பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை என சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தம்பி நிதன் சிற்றரசு கோாிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.