வாழ்வியல்

குலசேகர பாண்டியன் காலத்தில் உருவான மதுரை–2

Spread the love

விவசாயம் மதுரை மாவட்டத்தை வைகை நீர் பாயும் பகுதி, வைகை நீர் வராத பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். வைகை கால்வாயில் நீர் வரும்போது நெல், கரும்பு, மலர்கள், காய்கறி எண்ணெய் வித்துக்கள் சாகுபடி 3 போகம் விளையும். நிலத்தடி நீர்வளம் இருப்பதால், அதன் மூலமும் சாகுபடி நடைபெறும். வைகை நீர் பாயாத இடங்களில் கிணற்றுப் பாசனமும், மானாவரி பாசனமும் உண்டு. இங்கு கடலை பயிறு, சிறுதானியம், கீரை, சூரியகாந்தி, சோளம், முருங்கை பயிரிடுகின்றனர். பல இடங்களில் நன்னீரில் மீன் வளர்க்கின்றனர். பால் உற்பத்தி மிகச் சிறப்பாக உள்ளது. மதுரையிலிருந்து பால் சென்னைக்கும், மலர்கள் இதர இடங்களுக்கும் அதிகம் அனுப்பப்படுகிறது.

சுற்றுலா

‘‘மதுரை நகர் தூங்கா நகரம் என்ற பெயர் பெற்றது. இரவும் பகலும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வோரும் இங்கு தங்கி சென்று வருவர். இந்தியா முழுவதும் செல்ல, ரெயில், பஸ், விமான போக்குவரத்து தேவையான அளவு உள்ளது என பெருமைப்படுகின்றனர்.

மீனாட்சி அம்மன் ஆலயம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் இங்கு உள்ளதாலும் திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம், லூர்து அன்னை மாதா கோவில், கான்சாகிப் தர்கா, காந்தி மியூசியம், வண்டியூர் மதகு அணை இங்கு இருப்பதால் மதுரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வைகை அணை, மஞ்சளாறு அணை, கொடைக்கானல், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பழனி, சமணர் குகைகள், குற்றாலம், குமுளி என நூற்றுக்கணக்கான சுற்றுலா, ஆன்மிகத் தலங்கள் உள்ளதால், மதுரையில் வந்து தங்கி, இந்த இடங்களை பஸ், கார் மூலம் பார்த்துவிட்டு இங்கிருந்து பலர் செல்கின்றனர். கேரளா, ஆந்திரா பக்தர்கள், ஐயப்பன் கோயில் சென்று திரும்புவோர், மதுரைக்கு வராமல் செல்ல மாட்டார்கள். சுற்றுலா சார் தொழில்கள் சிறப்பாக அமையும்.

லாபகரமான தொழில்கள்

மதுரை மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சர்க்கரை, உணவு பதப்படுத்துதல், ரசாயனம் சம்பந்தமான தொழில்கள் சிறப்பாக நடைபெறும். மேலும் சுண்ணாம்பு, கிரானைட், சார்ந்த தொழில்களும் ஆயத்த ஆடைகள், சேலைகள், சரி உற்பத்தி, பயிற்சி / கல்வி மையங்கள், அழகு கலை நிலையங்கள், பிளாஸ்டிக் ரப்பர், பெட்டல் பவுடர், வாகனம், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, ஓட்டல், தங்குமிடம், பிரிண்டிங், இரும்பு பொருட்கள், ஆட்டோ உதிரி பாகம், பால் உப பொருட்கள் ஆகிய தொழில்கள் சிறப்பாக நடைபெறும்.

குறுகிய கால சுயதொழில் பயிற்சிகள் அளிப்போர்,

கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியின் ரூட்செட், க்ருஷி விஞ்ஞான் கேந்திரா, வேளான் கல்லூரியின் மனையின் பிரிவு, காந்தி நினைவு நிதி, மகளிர் பாலிடெக்னிக், காமராஜர் பல்கலையின் வயது வந்தோர் பிரிவு, மக்கள் கல்வி நிறுவனம் என, நூற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள் சுய தொழில் பயிற்சி தருகின்றன.

டிவிஎஸ் பாலிடெக்னிக், ஐடிஐ கள் கால்நடை பயிற்சி மையம், என்ஜிஓக்கள் நடத்தும் கம்ப்யூட்டர் / அழகு கலை / டெய்லரிங் பயிற்சி மையங்கள் மக்களுக்கு சிறந்த குறுகிய கால பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

தொழிற்பேட்டைகள்/அரசு திட்டங்கள்

பல சிட்கோ, சிப்காட், கைத்தறி தொழில் பேட்டைகள் இருந்தாலும், புதிதாக உருவாக்கப்பட்ட சிட்க்கோ, சிப்காட், எல்காட் தொழில்பேட்டைகள் முழுமையாக நிரம்பவில்லை. விரைவில் ஏராளமான தொழில் வரும் வாய்ப்பு உள்ளது. மலர் சாகுபடிக்கும், ஏற்றுமதிக்கும் தேவையான (நாகர்கோவில் போல்) பெரிய மலர் வணிக மையம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிறு, குரு கிராமிய, நெசவு, கைவினை தொழில்களுக்கு கடனுதவி அதிக அளவில் எதிர்பார்க்கின்றனர். காவிரியை, வைகையுடன் இணைந்து ஆற்று நீர் அதிகம் கிடைத்தால் தொழில் வளம் பெருகும்.

மக்களின் கோரிக்கைகள்

வைகை அணை நீர் வீணாகாமல் தடுக்க புதிய அணைகள் கேட்கின்றனர். காவேரி, வைகை தாமிரபரணியை இணைக்க வேண்டும். இருக்கும், உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளில் காலியின்றி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மத்திய அரசு மருத்துவமனை, கால்நடைக் கல்லூரி, உணவு பதப்படுத்தும் துறை கல்லூரிகள், புதிய அரசு கலைக் கல்லூரிகள் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும். கிரானைட், மணல் நாட்டுடமையாக்கி தர வேண்டும். காய்கறிகள், மலர்கள் வைக்க இலவச பெரிய ஏர்கண்டிஷன் செய்த கிடங்குகள் வேண்டும். புதிய கைத்தறி பயிற்சி மையம், நெசவாளர் சேவை மையம், பெரிசி சிப்பெட் பிளாஸ்டிக் கல்லூரி, வெளிநாடுகளுக்கு நேரடி விமான / கார்கோ சேவை எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *