அறிவியல் அறிவோம்
தண்ணீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், தண்ணீர் வீணாதல் மற்றும் வலுவிழந்துவரும் தண்ணீர் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகளை நியாயமான செலவில் எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கு மராட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள 20,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இரு சிறு நகரங்கள் உதாரணமாக உள்ளன.
ஏற்கனவே உள்ள குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ‘ஷாஃப்ட் வித் மல்டிப்பிள் அவுட்லெட்ஸ்’ என்னும் நிறைய துளைகள் கொண்ட தண்டு போன்ற அமைப்பை ஐஐடி பம்பாய் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தண்ணீரை சிறப்பான முறையில் விநியோகிக்க முடியும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆதரவோடு, ஐஐடி பம்பாய் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து உள்ளூர் கிராம பஞ்சாயத்தின் பங்களிப்போடு, பால்கர் மாவட்டத்தில் உள்ள சபாலே மற்றும் உமெர்பதா நகரங்களில் இந்த தீர்வை செயல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் விலை அதிகமான உள்கட்டமைப்பு உபகரணங்களின் தேவை குறையும். ஒட்டுமொத்த தண்ணீர் விநியோக அமைப்பின் செயல்திறன் அதிகரிக்கும்.