வாழ்வியல்

குறைந்த சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறைகள் என்னென்ன?

அணுவிலிருந்து சில எலக்ட்ரான்களை பிரித்து எடுப்பதன் மூலம் நாம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு எலக்ட்ரான்களை பிரித்தெடுப்பதற்கு பல வகையான சக்திகள் பயன்படுத்தப் படுகின்றன. உராய்தல் (Friction)ஒளி (Light)வெப்பம் (Heat)அழுத்தம் (Pressure) இரசாயண மாற்றம் (Chemical Action) காந்த சக்தி (Magnetism)

உராய்வினால் (Friction) மின் உற்பத்தி

இரண்டு பொருட்களை ஒன்றோடு ஒன்று உராயச்செய்தால் ஒன்றிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மற்றொரு பொருளோடு இணைந்து விடும். எலக்ட்ரான்களை இழந்த பொருள் (பாசிடிவ்) சார்ஜையும் எலக்ட்ரான்களை சேர்த்துக் கொண்ட பொருளானது நெகடிவ் (-) சார்ஜையும் பெறும். இவ்வாறு பெறக்கூடிய மின்சாரத்திற்கு” ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டி” (Static Electricity) என்று பெயர். உராய்வினால் எலக்ட்ரான்களை வெளிப்படகூடிய பொருட்கள் கண்ணாடி ரப்பர், மெழுகு, சில்க், ரேயான் நைலான் போன்றவையாகும்.

ஒளியினால் (Light) மின் உற்பத்தி

ஒரு பொருளின் மீது ஒளி (light) பட்டவுடன் அதிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மின்னோட்டத்தை ஏற்படுத்தும் இதற்கு ஃபோட்டோ செல் (Photo Cell) என்ற கருவி துணைபுரிகிறது. அதாவது Photo cell என்பது ஒளியை மின்சாரமாக மாற்றித் தருகிறது. இவ்வாறு ஒளிபட்டவுடன் எலக்ட்ரான்களை வெளியேற்றும் குணமுடைய பொருட்களுக்கு ஃபோட்டோ சென்சிடிவ் (Photo Sensitive) பொருட்கள் என்று பெயர். (எ.கா) சோடியம், பொட்டாசியம், லித்தியம், சீசியம் போன்றவை.

அழுத்தத்தினால் (Pressயre) மின் உற்பத்தி

ஓர் அணுவின் வெளிப்புறத்தில் உள்ள எலக்ட்ரான்களை அழுத்தத்தின் மூலம் பிரித்தெடுத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறைக்கு ஃபீஸோ எலக்ட்ரிசிட்டி (Piezo Electricity) என்று பெயர். காற்று ஒலி அலைகளானது டெலிபோனில் உள்ள டயாபார்ம் (diapharm) என்ற சாதனத்தை அழுத்துவதால் ஒலி அலைகளுக்குத்தக்கவாறு மின்சார அலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

வெப்பத்தினால் (heat) மின் உற்பத்தி

இரண்டு வெவ்வேறு உலோகக்கம்பிகளை ஒரு முனையில் இணைத்து இணைக்கப்பட்ட பாகத்தை வெப்பப்படுத்துவதன் மூலம் மின்னோட்டத்தை உண்டாக்கலாம். சூடுபடுத்தும் முனைக்கு எதிர்முனையில் ஒரு கால்வனா மீட்டரை இணைத்து, அதில் ஏற்படும் மின்னோட்டத்தை அறியலாம்.

இரண்டு உலோகத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து வெப்பப்படுத்துவதன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தெர்மோகப்ளிங் (Thermocoupling method) முறை என்று பெயர்.

மேற்கூறிய நான்கு வழிகளிலுமே அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரமும் சக்தி மிக்கதாக அமையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *