வாழ்வியல்

குறைந்த அளவு ஆல்கஹாலிலும் உடல் நல பாதிப்புகள் ஏற்படும்–1

ஆல்கஹால் குடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்ற முந்தைய ஆய்வை லான்செட்டில் வெளியாகியுள்ள உலக அளவில் நடத்தப்பட்ட பெரியதொரு புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.

மிதமான அளவு மது குடிப்பதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் என்றாலும், புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் வருகின்ற ஆபத்து இத்தகைய பாதுகாப்பை விட அதிகமாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள பல அம்சங்களால், இது வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நோய்களால் உலக நாடுகளில் ஏற்படும் சுமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1990 முதல் 2016 வரை 195 நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஆல்ஹகால் நிலைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

15 முதல் 95 வயது வரையானவர்களின் தரவுகளை பகுத்தாய்வு செய்தபோது, மது குடிக்காதவர்களை, ஒரு நாளைக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது அருந்துபவர்களோடு ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். மது குடிக்காத ஒரு லட்சம் பேரில் 914 பேருக்கு புற்றுநோய் அல்லது உட்காயம் போன்ற ஆல்கஹாலால் உருவாகின்ற உடல்நல பிரச்சனைகள் தோன்றியதை ஆய்வாளர்கள் கண்டனர்.

ஒரு நாளுக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது குடிப்பவர்களில் இத்தகைய உடல்நல பிரச்சனைகளை பெற்று கூடுதலாக 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை (20 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 63 பேர் உடல்நல பாதிப்புக்களை ஓராண்டில் பெற தொடங்கியிருந்தனர். ஒரு நாளைக்கு 5 முறை (50 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 338 பேருக்கு உடல் நல பிரச்சனைகள் தோன்றியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *