செய்திகள்

குறுகிய காலத்தில் அதிக தடுப்பூசி போட்ட நாடுகள்: இந்தியா 2வது இடம்

புதுடெல்லி, மே 27–

நாடு முழுவதும் 130 நாட்களில் 20 கோடியே 25 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி போட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2–வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. நேற்று வரை, 20 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 884 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 98 லட்சத்து 8 ஆயிரத்து 901 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 37 ஆயிரத்து 679 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

முன் களப்பணியாளர்களில் 1 கோடியே 52 லட்சத்து 42 ஆயிரத்து 964 பேருக்கு முதல் டோசும், 84 லட்சத்து 950 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

18- முதல் 44 வயது உள்ள 1 கோடியே 38 லட்சத்து 62 ஆயிரத்து 428 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் 45 முதல் -60 வயது வரை உள்ள பிரிவினருக்கு 6 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 1 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 128 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 128 பேர் முதல் டோசும், 1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 563 பேர் இரண்டாவது டோசும் போட்டுள்ளனர்

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில் மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 28 கோடியே 92 லட்சத்து 12 ஆயிரத்து 304 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்கிழமை வெளியான தகவலின்படி மொத்தம் 28 கோடியே 92 லட்சத்து 12 ஆயிரத்து 304 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 16 கோடியே 50 லட்சத்து 74 ஆயிரத்து 907 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 89 பேர் 2வது டோஸ் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *