வர்த்தகம்

குறுகலான தெருக்களில் செல்ல புதிய மினி சரக்கு லாரி: டாடா அறிமுகம்

சென்னை, மார்ச் 14–

நகரங்களில் கியாஸ் சிலிண்டர், மருந்து பெட்டிகள், முட்டை, பால் பொருட்கள், காய்கறிகளை சிறு தெருக்களில் கூட கொண்டு செல்ல ஏதுவாக மினி லாரிகளை ‘அல்ட்ரா ஸ்வீக்’ என்ற பெயரில் ‘டி சீரிஸ் ரகமாக டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 மாடல்கள் உள்ளது. டிரைவருக்கு சொகுசு வசதியுடன் சிரமம் இல்லாமல் ஓட்ட ஏதுவாக கேபின் அமைந்துள்ளது என்று வணிக வாகனங்கள் பிரிவு தலைவர் கிரிஷ் வாக் தெரிவித்தார். சோர்வு இல்லாத ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

சரிசெய்யக் கூடிய இருக்கை உயரம், சாய்வு தன்மைகள் மற்றும் டெலெஸ்கோபிக் பவர்ஸ்டீயரிங் மற்றும் டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட கியர் லீவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட இசை அமைப்பு, யுஎஸ்பி பாஸ்ட் – சார்ஜிங் போர்ட் மற்றும் தாராளமாக சேமிப்பு அமைவிடங்கள் ஆகியவை மேம்பட்ட வசதியை அளிக்கின்றன. அதே நேரத்தில் ஏர்பிரேக்குகள் மற்றும் பேரபோலிக் லீப் சஸ்பென்ஷன்கள் சிறந்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும். கிளியர் – லென்ஸ் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்-விளக்குகள் மூலம் இரவு நேரக் காட்சித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *