கும்பகோணம், மே 13–
கும்பகோணம் -அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ்குமார் (45) தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா (40) இவர்களுக்கு ஸ்ரீராம் (17) அபி ஸ்ரீ (15 )என்ற மகன், மகள் உள்ளனர். சதீஷ்குமார் தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக தனது காரில் குடும்பத்துடன் புறப்பட்டார். இன்று அதிகாலை கும்பகோணம் – தஞ்சாவூர் செல்லும் புறவழிச்சாலையில் அசூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா பலத்த காயங்களுடன் பலியானார். உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்து. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீராம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானனார். பலந்த காயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அபி ஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் தாய் – மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விபத்து தொடர்பாக சுவாமிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
![]()





