செய்திகள்

குமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி: மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவில், ஜூலை.29-

கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் உட்பட 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப் போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.