செய்திகள்

குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் ஆதரவற்றோருக்கு நிதி உதவி

Spread the love

குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் ஆதரவற்றோருக்கு நிதி உதவி:

பெரம்பலூர் கலெக்டரிடம் வழங்கினார்

பெரம்பலூர், ஏப்.2–

ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ இராமச்சந்திரன் தன் சொந்த நிதியாக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உணவின்றி தவிப்போர் மற்றும் கருணை இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கு உதவும் வகையில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தனது சொந்த நிதியாக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் காசோலையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தாவிடம் வழங்கினார்.

அதே போல் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தனது சொந்த பணம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளான ஆலத்தூர், வேப்பூர், செந்துறை உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 60 லட்சத்திற்கான கடிதத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *