செய்திகள்

குத்தாலத்தில் தேவை இன்றி சுற்றித் திரிந்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு

குத்தாலம், ஏப்.24–

நாகை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்தில் நாடெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் தேவையின்றி சுற்றித்திருந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவை இன்றி முகக்கவசம் இல்லாமலும் சுற்றி திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் குத்தாலம் பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த நபர்களை குத்தாலம் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குத்தாலம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குத்தாலம் காவல் நிலையம் வருபவர்கள் கை கால்களை சுத்தம் செய்யும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் காவலர்கள் உணவு அருந்த தனியாக வளாகத்தில் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *