சினிமா செய்திகள்

‘‘குதிரை ரேஸ் – பணக்காரர்களுக்கு; ஜல்லிக்கட்டு – ஏழைகளுக்கு’’!


ண்வாசனை கதை தான் சசிகுமாருக்கு. தித்திக்கும் திருநெல்வேலி அல்வா மாதிரி ரசித்து, ரசித்து ருசித்து நடித்திருக்கிறார்.

அப்பா ஆடுகளம் நரேனிடம் செல்லக் கோபம், காதலியிடம் முதல் அனுதாப சந்திப்பிலேயே மனசை பறிகொடுக்கும் காதல், ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி அவற்றை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கல் நெஞ்சுக்காரன் வில்லன் ஜேடி சக்கரவர்த்தி உடன் மோதல்…

பாசம் – காதல் – மோதல்: மூன்றிலும் மனசைத் தொடுகிறார் சசிகுமார். “நான் மிருகமாய் மாற…” படத்தில் ஏற்பட்ட சறுக்கல், திடீர் சரிவு – பரமபத விளையாட்டில் பாம்பு என்றால், ‘காரி’ சசிகுமாருக்கு ஏணி. சட்டென்று உயர ஏறி விடுகிறார்.

வறண்ட ஏரி இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற தனியார் நிறுவனம், அரசிடம் அனுமதி வாங்குகிறது. அதற்கு போர் கொடி தூக்கும் கிராமத்து இளைஞன் சசிகுமார், மக்களோடு அதை தடுத்து நிறுத்துவதும், வறண்ட ஏரியில் மறுபடியும் தண்ணீர் ஓட வழி காண்பதும் பிரதான கதை. நடுவில் குதிரைப் பந்தய கிங் (ரேஸ் மன்னன்) ராம்குமார் (‘செவாலியே’ சிவாஜிகணேசனின் மகன்) பின்னணியில் ஒரு கதை என்று முக்கோணத்தில் கதையை அதிரடி ஆக்சன் ஃபார்முலாவில் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.

‘‘ல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். வாழ்வியல்…’ என்று சொல்லும் இயக்குனர் ஹேமந்த்தின் ‘காரி’ படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும், அவர்களின் வாழ்வியலும், அவற்றை மையப்புள்ளியாக இருந்து ஜல்லிக்கட்டு எப்படி இணைக்கிறது என்பதைப் பற்றிக் கூறியுள்ளார்.

படத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளார். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.

‘‘கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளார்.

ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை அவருடைய பார்வையில் படமாக்கியுள்ளார் ஹேமந்த்.

சசிகுமார் – குதிரைப்பந்தய ஜாக்கி, ஆடுகளம் நரேன் குதிரைப் பந்தய பயிற்சியாளர். குதிரைப் பந்தயத்திற்கும் – ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. நாயகன், கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை அழகாகக் காட்டி இருக்கும் படம்: ‘காரி’.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, பின்னணி இசை இமான்: இயக்குனருக்கு பலம்.

நாயகி பார்வதி அருண். பாசம் கொட்டி வளர்த்த மாட்டை அப்பா விற்றது கண்டு புலம்பல் அழுகை, கொப்பளிக்கும் நடிப்புக்கு அந்த ஒரு காட்சி சாட்சி.

கிண்டி ரேஸ் குதிரைப் பந்தயக் காட்சிகள், வாடி வாசல் திறக்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் வீரர்கள் மோதும் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்… வெள்ளித்திரையில் கணேஷ் சந்திரா கேமிராவில் அருமை. நேரில் பார்த்து ரசித்த குதூகலம்.

சசிகுமாரின்

மசாலா படத்தில்

மனசு மகிழும்

சமூக மெசேஜ்.


வீ. ராம்ஜீ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *