செய்திகள்

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

சென்னை, ஆக. 29–

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை (30–ந்தேதி) முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது கரை வாய்கால்கள் மூலம் சிறப்பு நனைப்பு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புன்செய் பாசன பகுதியில் நலையில் உள்ள பயிர்களின் சிறப்பு நனைப்பிற்காக 30.8.2018 முதல் 8.9.2018 வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *