செய்திகள்

குணமாகாத முழங்கால் காயம்: ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்

சென்னை, ஏப். 23–

ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் அணிக்காக விளையாடும் சேலத்தை சேர்ந்த ‘யாக்கர்’ நடராஜன் முழங்கால் காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு ஐபிஎஎல் சீசனில், ஐதராபாத் அணிக்காக, நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக விளையாடவில்லை. அவர் விரைவில் மீண்டு வந்து விளையாடுவார் என வார்னர், விவிஎஸ் லஷ்மன் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

நடராஜன் விலகல்

ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்திற்கு ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20, ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

ஆனாலும் அவர் 100 சதவீதம் தகுதியாக இல்லை . ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்றவுடன் மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சைக்காக பெங்ளூரு என்சிஏவுக்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக ஐதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *