சென்னை, செப். 24–
வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, முழுமையாக குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடு திரும்பினார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். துரை தயாநிதி கடந்த டிசம்பர் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டிஸ்சார்ஜ் ஆன தயாநிதி
அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில், இருந்த துரை தயாநிதி குணமடைந்ததையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளார்.