நல்வாழ்வு
குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல்,
விக்கல், வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றை தீர்க்கும் ஆற்றல் மிக்க மூலிகை ஆடாதோடை.
குழந்தைகளுக்கு 5 + 5 துளி, ;சிறுவர் 10 + 10 துளி;
பெரியவர் 15 + 15 துளி ஆடாதோடை இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.
10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் (T.B) காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், விலாவலி ஆகியவைத் தீரும்.
ஆடாதொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.
ஆடாதொடை இலையையும் சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகப் காய்ச்சிக் காலை, மாலை பருகி வர குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.
உலர்ந்த ஆடாதொடை இளைத்தூளை சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.