சிறுகதை

குடை – ராஜா செல்லமுத்து


சிறுகதை


சாயங்காலம் எப்போதும் போல நண்பர் ஜெய் உடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் மனோ.

சின்னதாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. வானிலை ஆராய்ச்சி நிலையம் துல்லியமாக கணித்துச் சொன்னபடியே மழை பெய்து கொண்டிருந்தது .

நண்பர் ஜெய்யும் சிரித்துக் கொண்டார்.

மனோ இப்பல்லாம் வானிலை ஆராய்ச்சி நிலையம் கணிப்பு தவறுவதில்லை . அவங்க என்ன சொல்றார்களோ? அப்படியே வானத்துல மழை பெய்யுது பாருங்க. இன்னைக்கு சாயங்காலம் மிதமான மழை பெய்யும்னு சொன்னாங்க. இப்போ மிதமான மழை பெய்யுது பாருங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூறல் கொஞ்சம் அதிகமானது. முதலில் சொட்டுச் சொட்டாக விழுந்த மழைத்துளி, இப்போது திட்டு திட்டு திட்டாய் விழுந்து அந்தப் பகுதியை நனைத்துக் கொண்டிருந்தது .

சிறு மழை பெரு மழையாகி அவர்கள் நடை பயணம் மேற்கொண்டிருந்த பூங்காவை அனைத்தும் நனைத்தது. அவர்கள் நடந்து கொண்டிருந்த பூங்கா சிறுவர்கள் விளையாட்டு பூங்கா ஆனால் ,அங்கு சிறுவர்களை விட அதிகமாக பெரியவர்களே விளையாடிக் கொண்டிருப்பார்கள்

மழை பெய்து கொண்டிருந்தபோது அங்கே ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் ரொம்பவே அவதிப்பட்டார்கள் வாக்கிங் வந்தவர்கள்.

குழந்தைகளும் இருந்தார்கள் அங்கே ஒதுங்குவதற்கு நிழல் குடை, மழைக் குடை எதுவும் இல்லை .எந்த பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.

மனோவும் ஜெய்யும் இதைப்பற்றி தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இது குழந்தைகள் பூங்கா தான்னு பேரு. ஆனா இங்க ஒதுங்க இடம் இல்லை . மழை பெஞ்சா இந்த குழந்தைகள் எங்கே போரும் என்று அவர்கள் பேசியதை அருகிலிருந்த காவலாளி கேட்டார் .

நீங்க சொல்றது கரெக்ட் தான். ஆனா இங்கே நிழல் கூட இல்ல ஒதுங்குவது . குட வச்சா இங்க வர்ற பசங்க எந்திரிச்சு போக மாட்டேங்கிறாங்க . பக்கத்துல பெண் குழந்தைகளை உட்கார வச்சு என்னென்னமோ செய்றாங்க. அதுதான் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார் அந்தக் காவலாளி .

அது இல்லைங்க. இது குழந்தைங்க பூங்கா தானே . இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் இங்கே விளையாடுறாங்க . திடீர்னு மழை வந்தால் எங்க ஒதுங்குவாங்க. அதை யோசிக்கலை பாருங்க?

நீங்க இருக்கிற வீட்ல கொஞ்சம் பேர் உட்காரலாம் . மத்தவங்க எல்லாம் நனைச்சுக்கிட்டே வெளியில ஓடிட்டாங்க. இது தவறு யார் கூட காண்ட்ராக்டர் என்று மனோ கேட்டபோது,

வெளியில் அவங்க போன் நம்பர் எழுதி இருக்காங்க. அவங்களுக்கு ‘போன் பண்ணு நீங்க விவரத்தை சொல்லலாம் என்றார் அந்த பூங்கா காவலாளி .

சோவென்று பெய்த பெருமழை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது .

பாவம் குழந்தைகள் நனைந்து கொண்டே சென்றார்கள். உடன் அவர்கள் பெற்றோர்களும் இதைப் பார்த்து ஜெய்க்கு கோபம் வந்தது.

‘‘என்ன இது? தப்பு. ஒரு அரசாங்க பூங்கா அதுவும் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிற பூங்கா. மழை வந்தா , வெயில் அடிச்சா ஒதுங்க இடம் இல்லாம இருக்கு’’ என்று ஜெய்யும் தன் பங்குக்கு கோபப்பட்டார்.

வெளியே வந்த மனோ பூங்காவிற்கு வெளியே எழுதப்பட்டிருந்த காண்ட்ராக்டர் நம்பரை பார்த்து தன் செல்போனில் இருந்து அந்த காண்ட்ராக்டருக்கு போன் செய்தார்

ஹலோ என்று மனோ கேட்க

எதிர் திசையில் இருக்கும் காண்ட்ராக்டர்

‘‘என்ன’’, என்று கேட்டார்.

நான் கேசவர்த்தினிக்கிட்ட இருக்கிற பூங்காவில் இருக்கேன் . அங்க மழை பெஞ்சா ஒதுங்குவதற்கு ஒரு குடை கூட இல்லையே ? ஏன் வைக்கல ? என்று கேட்டார்

அதற்கு எதிர் திசையில் இருந்தவர் அது அரசாங்கத்தை பார்த்து கேட்கிற கேள்வி. என்ன பார்த்து கேட்டு என்ன செய்ய?

நீங்க தான காண்ட்ராக்டரா ? என்றார்

‘‘ஆமா நான் தான் …’’

அரசாங்க ஆட்கள் எல்லாம் இங்கே வந்து என்னென்ன இருக்குன்னு பாத்துட்டு போக மாட்டாங்க. அது அவங்களுக்கு வேலையும் இல்ல . அப்படி ஒவ்வொரு அரசாங்க ஆளுங்களும் எங்கங்க என்ன தப்பு நடக்குதுன்னு பார்த்தா…. இங்கே ஒரு தப்பு நடக்காது . ஆனா அவங்க எல்லாம் யாரும் செய்ய மாட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிற உங்கள மாதிரி ஆளுக்கு தான் எடுத்துச் சொல்லணும் என்று மனோ சொன்னபோது

எதிர்திசையில் இருந்தவருக்கு நிச்சயம் கோபம் வந்து இருக்க வேண்டும் .

‘‘சரி பாக்கலாம்’’ என்று போனைக் கட் செய்தார் .

என்ன இது? இவ்வளவு சொல்றோம் ; கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சொல்றாரு என்று எண்ணிய மனோ இரவு பேச வேண்டாம் என்று விட்டு விட்டார்.

இந்த பூங்கா எந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதை தெரிந்துகொண்டு, மறுநாள் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டார் . அங்கு நடக்கும் விஷயத்தையும் அங்கிருந்து அவலத்தையும் சொன்னபோது அத்தனை விஷயத்தையும் கேட்ட அரசாங்கத்தின் ஆட்கள் மறுநாளே அந்த பூங்காவிற்கு வந்தார்கள்.

ஐந்து நபர்கள் கொண்ட குழு மனோ சொன்ன அத்தனையும் பார்த்து எழுதி குறித்துக் கொண்டார்கள்.

நேத்து ஒருத்தர் எங்களுக்கு போன் பண்ணாரு. அவர் சொன்னது உண்மைதான். ஏன்னா இங்க விளையாடற குழந்தைக, இங்க நடக்குற ஆட்களுக்கு மழை பெஞ்சா ஒதுங்க இடம் இல்லை என்றார்.

இது தவறு தான் இதை எங்கள் கவனத்துக்கு யாரும் கொண்டு வரல என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போதே படபடவென மழை பெய்தது.

அப்போது அந்த பூங்காவிற்கு வந்த அரசாங்க ஊழியர்களும் ஒதுங்க இடமில்லாமல் நனைந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த பூங்காவில் மனோவும் இருந்தார் .

அந்த அரசாங்க ஊழியர்கள் நனைந்து கொண்டிருந்தைப் பார்த்தார்.

சரி வாங்க போய் வரலாம் என்று ஒரு ஊழியர் சொல்ல ,

அவர்கள் ஒவ்வொருவராக நனைந்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள்.

மனோவும் ஜெய்யும் அந்தப் பூங்காவில் சிரித்தபடி அந்த ஊழியர்களை பார்த்தார்கள் .

கரெக்ட் யாரோ ஒரு புண்ணியவான் போன் பண்ணிச் சொன்னார் .

மழை வந்தா ஒதுங்க கூட ஒரு இடம் இல்லன்னு சொன்னத நம்ம கண்கூடாகவே அனுபவிச்சிட்டோம் என்று பேசிக்கொண்டே அவர்கள் அந்த அரசாங்க காரில் ஏறிச் சென்றார்கள் .

மறுநாள் அந்தப் பூங்காவில் ஜரூராக குடை அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது .

ஜெய்யும் மனாேவும் மறுநாளும் நடைபயணம் மேற்கொண்டார்கள்.

ஆனால் அங்கு மற்றவர்களுக்கு இவர்கள் பேசியது தெரிய நியாயமில்லதான். குடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது .

ஒரு குழந்தை அம்மாவிடம் சொன்னது ,

அம்மா இனிமே இந்த பூங்காவுல மழை பெஞ்சா , நம்ம ஓட வேண்டாம்; இங்கேயே நிக்கலாம் . குடை பண்றாங்க பாரு என்று அந்த குழந்தை தன் செல்லக் குரலில் சொன்னது …

அது

மனோ, ஜெய்யின் காதில் விழுந்து மகிழ்ச்சி மழை பெய்யத் துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published.