செய்திகள்

குடும்ப பிரச்சினை: கடலில் குதித்து வாலிபர் தற்கொலை

சென்னை, ஏப், 27

சென்னை காசிமேட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, காசிமேடு, மீன்பிடி துறைமுகம் கடற்கரை ஓரமாக, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது, தகவல் கிடைத்ததும் காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து போனது பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன், 2 வது தெருவைச் சேர்ந்த ஜேக்கப் ஜெயக்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது, இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சனையால் ஜேக்கப் ஜெயக்குமார் கடந்த இரண்டு நாட்களாக வீட்டுக்கு போக வில்லை. இந்நிலையில் அவர் கரையில் பிணமாக கிடந்துள்ளார். எனவே, அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந் சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *