செய்திகள்

1,297 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதிஉதவி

கரூர் மாவட்டத்தில்

1,297 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதிஉதவி

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர், பிப். 26

கரூர் மாவட்டம் பிரேம் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை சார்பில் ஆயிரத்து 297 ஏழை பெண்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்றவாறு ரூ.87.36 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவியும், 479.89 லட்சம் மதிப்பில் 10.36 கிலோ கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் என ரூ.567.25 லட்சம் மதிப்பிலான உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலெக்டர் மலர்விழி தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவித்ததாவது:

சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், அதற்கு கல்விதான் மிக முக்கியமான ஒன்றாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலையை மாற்றி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், 18 வயது பூர்த்தி அடைந்த பின்பே திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசின் திட்டங்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும், அருமருந்தாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றான ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய பெண்களுக்கான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், சமூக நலத்துறை அலுவலர் ரவிபாலா, வேளாண்மை கூட்டுறவு திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், கருர் வேளாண்மை கூட்டுறவு மொத்த விற்பனை சங்கத்தலைவர் ஜெயராஜ், கரூர் நகர வேளாண்மை கூட்டுறவு மொத்தவிற்பனை சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கண்ணதாசன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மார்க்கண்டேயன் (க.பரமத்தி), சிவகாமி (தாந்தோணி) மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *