செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை, ஜூன் 15–

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக குடும்ப தலைவிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.