செய்திகள்

குடியேற்ற கொள்கைக்கு தடைவிதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவு சட்டவிரோதமானது

குடியேற்ற கொள்கைக்கு தடைவிதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவு சட்டவிரோதமானது

அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நியூயார்க், ஜூன் 19–-

குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டிரம்பிற்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்காவிற்குள் சிறுவயதில் குடியேறியவர்களை பாதுகாக்கும் (டாகா) திட்டத்தை நீக்குவது சட்ட விரோதமானது என அமெரிக்க கீழமை நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்தனர். இவர்களை பாதுகாக்கும் “டிரீமர்ஸ்” திட்டமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களை பாதுகாத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் திட்டத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2017–ம் ஆண்டு அமல்படுத்தினார்.

ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயல்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *