செய்திகள்

குடிபோதையில்60 அடி உயரத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்: உயிர் பிழைத்த அதிசயம்

கன்னியாகுமரி, ஜன. 25–

குடிபோதையில் 60 அடி உயரத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மதுபோதையில் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார்.

உடனே தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து வந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (வயது 45), என்றும் மது போதையில் இருந்ததால் ரெயில்வே பாலத்திலிருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *