செய்திகள்

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி

புதுடெல்லி, ஏப்.11–

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 235 கி.மீ. தொலைவில் பருச் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.