செய்திகள்

குஜராத் கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.1800 கோடிபோதை பொருள் பறிமுதல்

Makkal Kural Official

ஆமதாபாத், ஏப். 14–

குஜராத் கடல் வழியாக கடத்துவதற்கு தயாராக இருந்த ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம், கடற்கரை பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடற்கரை பகுதியில், இந்திய கடலோர காவல் படை, குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 300 கிலோ போதைப் பொருள் கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில்,

“எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தென் குஜராத் மற்றும் வட மகாராஷ்டிரா கடற்கரையில் பணியில் இருந்தபோது, சந்தேகப்படும் வகையில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. உடனே அந்த படகை விரட்டிச் சென்றபோது அதைப் பார்த்த கடத்தல்காரர்கள் போதைப் பொருட்களை கடலில் தூக்கி வீசிவிட்டு படகை வேகமாக செலுத்தினர். இந்த நிலையில் அந்த படகு இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்ற நிலையில் அவர்களை பிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *