செய்திகள்

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பு போதை மருந்து பறிமுதல்; 6 பாகிஸ்தானியர்கள் கைது

கடத்தல் படகும் கைப்பற்றப்பட்டது

வதோதரா, செப்.14–

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதிலிருந்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து ஜக்காவ் கடலோர பகுதியில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து, 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானிய படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதிக்குள் 6 கி.மீ. வரை நுழைந்துள்ளது.

அதனை இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள், இரண்டு அதிரடி விரைவு படகுகளில் துரத்தி சென்று, தடுத்து நிறுத்தி, பின்னர் அதில் சோதனையிட்டனர். அந்தப் படகில் 40 கிலோ எடை கொண்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானிய படகை பறிமுதல் செய்த படையினர் அதனை ஜக்காவ் பகுதிக்கு கொண்டு விசாரணை நடந்து வருகிறது. அதிலிருந்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.