செய்திகள்

குஜராத்தை சேர்ந்தவர் டிமேட் கணக்கில் தவறுதலாக வரவான ரூ.11,677 கோடி

அகமதாபாத், செப். 17–

குஜராத்தை சேர்ந்த ஒருவரது டிமேட் கணக்கில், ரூ.11,677 கோடி தவறுதலாக வரவு செய்யப்பட்டு அன்று இரவே பணம் மீண்டும் எடுக்கப்பட்ட நிலையிலும், ரூ.2 கோடியை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் ரூ.5 லட்சம் லாபம் பார்த்துள்ளார் அந்த கணக்குக்கு சொந்தக்காரர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் ரமேஷ் சாகர். பங்கு வர்த்தக்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவரது டிமேட் கணக்கில், கடந்த ஜூலை 26ம் தேதி, ரூ.11 ஆயிரத்து 677 கோடி வரவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை கண்டும் பதற்றப்படாமல், அந்த தொகையிலிருந்து ரூ.2 கோடியை பங்கு சந்தையில் உடனடியாக முதலீடு செய்திருக்கிறார். அதிலிருந்து அன்றைய நாளில், ரூ.5 லட்சம் லாபம் பார்த்துள்ளார்.

ரூ.5 லட்சம் ஈட்டிய கெட்டிக்காரர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறாக பணம் வரவு செய்யப்பட்ட தகவலை தெரிவித்து, அன்றைய இரவு மீண்டும் பணத்தை வங்கி திரும்ப பெற்றுவிட்டது. இடைப்பட்ட 8 மணி நேரத்தில், ரமேஷ் சாகர் தனது புத்திசாலிதனத்தால் ரூ.5 லட்சம் சம்பாதித்திருக்கிறார். அண்மையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில், இப்படி தவறுதலாக ரூ.50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட, அவர், சில மணி நேரம், உலக பில்லியனர் பட்டியலில் 25வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *