செய்திகள்

குஜராத்தில் புதிய தடுப்பணைக்கு மோடியின் தாய் ஹீராபென் பெயர்

காந்திநகர், ஜன. 7–

குஜராத்தில் புதிய தடுப்பணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் பெயர் சூட்டப்படுகிறது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், கடந்த 28ஆம் தேதி உடல்நல குறைவால் அகமதாபாத் யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 30 ந்தேதி சிகிச்சை பலனின்றி தனது 100 ஆவது வயதில் காலமானார். இதையடுத்து அன்றைய நாளிலேயே தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி அவரது உடலை தகனம் செய்தார்.

அணைக்கு மோடி தாய் பெயர்

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளம், 150 அடி அகலத்தில் உள்ள தடுப்பணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி ராஜ்கோட் மேயர், எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது. இந்த தடுப்பணையை கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டுகிறது. இந்த புதிய தடுப்பணையில் 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *