சூரத், டிச. 03–
குஜராத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல், சூரத்தின் பிம்ராட் பகுதியிலுள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
குஜராத் மாநிலம், சூரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல் (வயது 30) சூரத்தின் பிம்ராட் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை கூறுகையில், சம்பவத்திற்கு முன்பு, தீபிகா படேல் வார்டு 30 கவுன்சிலர் சிராக் சோலங்கியை அழைத்து, மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தனது வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
சகோதரர் சிராக் உடனடியாக தீபிகா பட்டேல் வீட்டுக்குச் சென்றுள்ளார். பலமுறை கதவைத் தட்டியும் தீபிகாவிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக சகோதரர் சிராக் சோலங்கி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தூக்கிட்டு தற்கொலை
ஆனால் அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தன்று தீபிகாவின் கணவர் வீட்டில் இல்லை. வீட்டில் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.
துணை போலீஸ் கமிஷனர் விஜய் சிங் குர்ஜார் இதுகுறித்து கூறுகையில், “அல்தானாவில் உள்ள வார்டு எண் 30 இன் பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக தீபிகா இருந்தார். தற்போது தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.