சென்னை, நவ. 11-
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த மாதமே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது உறவினர் ஒருவரை டிசம்பர் மாதம் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி வெளியாகி அவரின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது.
இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. அவர் திருமணம் குறித்து இதற்கு முன்பும் சில முறை செய்திகள் பரவின. அதை அவர் தந்தை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது