செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

Makkal Kural Official

சென்னை, பிப். 1–

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார் 4 கிலோமீட்டர் அளவுக்கு சென்று வீட்டை அடைந்தனர். பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை தேடி வந்தநிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *