செய்திகள்

கிருமிநாசினி ஜவுளிகளை வெற்றிகரமாக தயாரித்து ஏற்றுமதி விற்பனை செய்து திருப்பூர் டாக்டர் சுதா சாதனை


அறிவியல் அறிவோம்


கிருமிநாசினி ஜவுளிகளை வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து திருப்பூர் டாக்டர் சுதாசாதனை படைத்து வருகிறார்

திருப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சுதா. மருத்துவம் படித்து முடித்து மருத்துவராக பணி புரிந்த இவர், தற்போது பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் கிருமிநாசினி ஜவுளிகளை தயாரிக்கும் சுவாஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மருத்துவம் படித்தவரான சுதா வெற்றிகரமான தொழில்முனைவோராகி பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கி வரும்

‘சுவாஸ்’ ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கிருமிநாசினி (Anti microbial ) படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், குளியல் மற்றும் சமையலறைத் துண்டுகள் என காலத்திற்கேற்ற, புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது சுதாவின் சுவாஸ்.

38 வயதாகும் சுதாவின் அப்பா திருப்பூரில் மிகப்பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனர். சுமார் 40 ஆண்டுகளாக டெக்ஸ்டைல் தொழிலில் இருந்து வரும் அவர், அடிமட்ட நிலையில் இருந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். 1985ம் ஆண்டு அவர் ஆரம்பித்த பிகேஎஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்.படுக்கை விரிப்புகள், தலையணை உறை மற்றும் துண்டுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சிறுவயதில் இருந்தே அப்பாவின் டெக்ஸ்டைல்ஸ் தொழிலைப் பார்த்து வளர்ந்த போதும் சுதாவுக்கு ஆரம்பத்தில் அதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் அவரது அக்கா டெக்ஸ்டைல்ஸ் பற்றிய படிப்புகளை முடித்து அப்பாவுக்கு துணையாக தங்களது நிறுவனத்திலேயே பணியாற்றத் தொடங்க, சுதா மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ளார். அங்கு தான் உண்மையிலேயே தனக்கு எதில் ஆர்வம் அதிகம், எந்தத் தொழிலில் ஈடுபட்டால் தன்னால் அதில் வெற்றி பெற முடியும் என்ற தெளிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2005ல் மருத்துவப் படிப்பை முடித்த சுதா, பிறகு சில காலங்கள் மருத்துவராக இருந்துள்ளார். அப்போதும் கூட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை விட மருத்துவமனை நிர்வாகம் போன்றவற்றில் தான் அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. எப்படி இவ்வளவு பேர் ஒத்துழைப்போடு வேலை பார்க்கிறார்கள், பெரிய மருத்துவமனைகளில் எப்படி ஒவ்வொரு துறையும் ஒற்றுமையாக இயங்குகிறது என்பது மாதிரியான விஷயங்களைத்தான் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்.

சுதாவும், அவரது அக்காவும் சேர்ந்து ‘பிகேஎஸ்’’BKS’ ஜவுளி நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பிகேஎஸ்-ல் 95 சதவீதம் ஏற்றுமதிக்காகவே பொருட்களைத் தயாரிக்கின்றனர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *